போதைப் பொருள் தலைமுறையினரை அழித்துவிடும்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

போதைப்பொருள் பழக்கம் என்பது தலைமுறையினரின் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல் போதை பொருள் கடத்தலில் கிடைக்கும் வருமானம் தீவிரவாத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி…

போதைப்பொருள் பழக்கம் என்பது தலைமுறையினரின் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல் போதை பொருள் கடத்தலில் கிடைக்கும் வருமானம் தீவிரவாத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் ஒருவர் போதை பொருள் கடத்தலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் (NCB) மூலம் பல்வேறு நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த குழுவானது ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை போதை பொருள் கடத்தல் குறித்த தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறது

மேலும் போதை பொருள்களை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. விமானநிலையங்கள், நாட்டின் எல்லைப் பகுதிகள், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள்களை அதிகாரிகள் அவ்வப்போது கைப்பற்றுவதோடு, அதனை சட்டவிரோதமாக கடத்துபவர்களையும் அதிகாரிகள் கைது செய்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த போதை பொருள்கள் நம் எதிர்கால இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அழித்துவிடும். மேலும், போதை பொருள் கடத்தலில் கிடைக்கும் வருமானமானது தீவிரவாத்திற்கு பயன்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநிலங்களுக்கு இடையே போதை பொருள் கடத்தல் செய்யும் கும்பல்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். அந்த தொழிற்சாலைகள் சீல் வைத்து மூடப்பட்டு வருகின்றன. 12 மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடத்தல் கும்பலும் கைது செய்யப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

75 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ எடை கொண்ட, போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.