முக்கியச் செய்திகள் சினிமா

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு QR CODE உடன் கூடிய பாஸ்

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு QR CODE உடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 1000 த்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கண் தானம் வழங்கவும், பெறவும் ஏற்ற வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தளபதி விழியகம் என்ற புதிய இணையதள செயலி துவங்கபட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு
பிரியாணி வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி வரும் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட டிக்கட்களில் QR code அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், கடந்த முறை வழங்கிய அனுமதி டிக்கட்டில் குளறுபடி ஏற்பட்டதாகவும், அதுபோல இந்த முறை நடக்காமல் இருப்பதற்காக QR Code
அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் வாரிசு திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பார்வையாளருக்கு
விழியகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம்
வழங்கவும் அறிவுரை வழங்கினார்.


பின், செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்,  தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் குருதியகம் செயல்பட்ட வந்த நிலையில் தற்போது விழியகமும் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு
டிக்கெட் தேவைப்படுமே அவ்வளவு வழங்கப்படும். மேலும் இந்த விழியகத்தை சிறப்பாக மக்கள் நிர்வாகிகள் செயல்படுத்துவார்கள் என நம்புவதாக கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் யார் ஈடுப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர்

G SaravanaKumar

19 வயதிலேயே அமெரிக்க ஓபன்; வருங்கால சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னன் கார்லஸ் அல்கரஸ்

EZHILARASAN D

ஜல்லிக்கட்டு நடத்த அரசு தேதி அறிவித்த பிறகே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: உதவி ஆணையர் எச்சரிக்கை

Vandhana