டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்காக இன்று ஆஜரானார். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார்…

டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையும் படியுங்கள் : “கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு!

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து,  ஜாபக் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.  அந்த சம்மனில்,  டெல்லி ஆர்.கே. புரத்தில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் ஏப்.2 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று (ஏப். 2) ஆஜரானார்.  அவரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.