போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள்…

ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள் எனக் கூறி சிலர் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய தீவிர ரோந்து பணியில் இளைஞர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சலுடன் சுற்றி திரிந்துள்ளார்.

போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில், சாஸ்திரி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஶ்ரீநாத் என்பதும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

பின்னா் ஶ்ரீநாத் -யிடம் இருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஶ்ரீநாத்திற்கு விற்பனை செய்த ஹரிஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹரீஷ் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உளள்து குறிப்பிடத்தக்கது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.