தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு தலைமையில் போதைப்பொருள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போதைப்பொருள், செல்போன், தொலைக்காட்சி போன்றவை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மேற்கொண்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் நாடக நிகழ்ச்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதிவதனி வணங்காமுடி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சத்தியராஜ், அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் பரஞ்சோதி, வழக்கறிஞர் ரகமத்துல்லா மற்றும் அரசு மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோா் பொதுமக்களுடன் இருந்தனர்.
—-ரூபி.காமராஜ்







