33.9 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடற்கரைகளை கண்காணிக்க டிரோன் – விரைவில் நடைமுறை

கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன் சோதனை ஓட்டமானது சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கடலில் தத்தளிப்போரை மீட்கும் வகையில் டிரோன் மூலமாக கண்காணிக்கும் முறை, விரைவில் நடைமுறைக்கு வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கூட்டங்களை கண்காணித்து குற்றங்களை குறைப்பதற்காகவும், கடற்கரையில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தவும் 3.6 கோடி மதிப்பில் 9 ஆளில்லா விமானங்கள் தமிழக காவல்துறையால் வாங்கப்பட்டது. மூன்று வகையான ஆளில்லா விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

Quick response என்ற வகையில் உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக HD கேமராக்கள் மற்றும் இரவு நேரமும் காட்சிகளை பதிவு செய்யும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட 2கிமீ தூரத்துக்கு 30 நிமிடம் தொடர்ந்து பறக்கும் 6 ஆளில்லா விமானமும், நீண்ட தூரத்தை கண்காணிக்கும் வகையில் சுமார் 100 நிமிடங்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று கண்காணிக்கும் வகையில் வசதிகளை கொண்ட 2 ஆளில்லா விமானமும் மற்றும் அதிக திறன் கொண்ட அதிக எடையை தூக்கி பறக்கும் வகையில் சுமார் 15 நிமிடங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் பறக்கும் வகையில் அமைப்புடைய 1 ஆளில்லா விமானம் வாங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் குளிக்க சென்று பலர் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் அதிகரித்து வருவதால் அவர்களை உயிருடன் மீட்பதற்காக, கடலில் தத்தளிக்கும் போது லைப் ஜாக்கெட் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன் சோதனை ஓட்டமானது பெசன்ட் நகரில் நடைபெற்றது. டிரோன் மூலமாக கண்காணிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading