பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்தது.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து டிரோன் (ஆளில்லா விமானம்) ஒன்று இன்று காலை 4.15 மணிக்கு அர்னியா பகுதியில் சர்வதேச எல்லை வழியாக நமது நாட்டுக்குள் நுழைய முயன்றது. அதை கவனித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், டிரோனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த டிரோன் 300 மீட்டர் உயரத்தில் பறந்தது. இதற்கு முன்பும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்தன. நமது வீரர்கள் டிரோனை கண்டறிந்து விரட்டி அடித்திருக்கின்றனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச எல்லையில் இதேபோன்று கடந்த மாதம் 15ம் தேதி மற்றும் பிப்ரவரி 24ம் தேதியில் டிரோன் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட பொருட்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கண்டெடுத்தது. அதில், சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள், ஒயர்கள், ஐஇடி டைமர்ஸ், கைத்துப்பாக்கிகள், இரண்டு இதழ்கல், 6 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்








