இலங்கைக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு

இலங்கையில் நடைபெற இருக்கும் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியின் பெயர் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி…

இலங்கையில் நடைபெற இருக்கும் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியின் பெயர் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாட உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அகில இந்திய மகளிர் கிரிக்கெட் தேர்வு மைய அதிகாரிகள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், இலங்கை சுற்று பயணம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அணியில் இடம் பெறும் வீராங்கனைகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிரான இந்திய மகளிர் T20 அணியை ஹர்மன் பிரித் கவுர் தலைமை ஏற்க, ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சபாலி வர்மா, யாஸ்டிகா பாட்டியா, எஸ் மேகனா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிகுவஸ், ராதா யாதவ் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், இந்திய மகளிர் ஒருநாள் போட்டி அணியினை ஹர்மன் பிரித் கவுர் தலைமை ஏற்க, ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சபாலி வர்மா, யாஸ்டிகா பாட்டியா, எஸ் மேகனா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங், தனியா பாட்டியா, ஹர்லீன் டியோல் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

முதல் டி20 போட்டி இந்த மாதம் 23ம் தேதியும், இரண்டாவது போட்டி 25ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 27ம் தேதியும் இலங்கையில் உள்ள தம்புளா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கே.எல்.ராகுல் திடீர் விலகல்; புதிய கேப்டன் இவர் தான்

ஒருநாள் கிரிக்கெட் பொறுத்தவரை, வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் ஒரு நாள் போட்டியும், 4ம் தேதி இரண்டாவது போட்டியும், 7ம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.