வெள்ளத்தில் சிக்கிய நபரை போலீசார் மிக லாவகமாக மீட்டு வரும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
ஆற்றுத் தீவில் சிக்கிய ஒருவரை மீட்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் இந்த வீடியோவைப தங்கள் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த நபர் எப்படி ஆபத்தான சூழ்நிலையில் சிக்கினார் மற்றும் இறுதியாக அவர் மீட்கப்பட்ட விதத்தை விளக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.
அந்த பதிவில், “கிங் சிட்டியில் ஜோலோன் சாலைக்கு அருகில் உள்ள சலினாஸ் ஆற்றில் சிக்கிய நபரை மீட்பதற்கு உதவுமாறு மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அந்த நபர் மற்றும் அவரது காரும் மூழ்கும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் அவரை மீட்க ஹெச்-70 விமானம் சரியான நேரத்தில் மீட்பு படையினருடன் சென்றது.
அண்மைச் செய்தி : தென்னாப்பிரிக்காவுக்கு பறக்கும் இந்தியன் 2 படக்குழு…
பிறகு விமானத்திலிருந்து மீட்பு படையை சேர்ந்த வீரர் கீழிறக்கப்பட்டார். பிறகு அவருடன் வெள்ளத்தில் சிக்கிய நபரை மேலே தூக்கப்பட்டார். இருவரும் பத்திரமாக விமானத்துக்கு வந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதுவரை 43,000 பேர் பார்த்துள்ளனர். மேலும் 400 லைக்குகளை பெற்றுள்ளது.







