தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தமன்னா, பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து வெப்சீரியஸ்களில் கமிட் ஆகி வருகிறார்.
தமன்னா எப்போதும் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர். தமிழில் காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் வந்தார். 50 வயது ஆகியும் தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்போதும் தபுவுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமன்னா ஒரு நேர்காணலில் தபு குறித்து மனம் திறந்துள்ளார். “எனக்கு கரீனா கபூர், தபு ஆகியோரை மிகவும் பிடிக்கும். குறிப்பாக தபுவை மிகவும் பிடிக்கும். அவரை காதலிக்கிறேன். பெண்கள் இது மாதிரி தான் இருக்க வேண்டும். இந்த வயதிலும் அழகாக இருக்க வேண்டும். நடிகைகளுக்கு இவர்களாகவே திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடிகைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுமாதிரி எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். உண்மையிலேயே எனக்கு திருமணம் நடந்தாலும் யாரும் நம்பமாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா