எட்டாம் வகுப்பு வரையில் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை மூலம் நேற்று வலியுறுத்தியிருந்தேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீண்ட வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான பணி. பள்ளிக் கல்வித்துறைக்கு பாராட்டுகள். இந்த வசதியால் மக்கள் பயன்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.