காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 4 பேர் மாயமாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி உத்யோக் நகரில் காலணி தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதன் குடோனில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 31 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்து வருகின்றன. தீவிபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியே ஓடிவிட்டனர். 10 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் தீயணைப்புத் துறையினர் ஆறு பேரை மீட்டனர். மேலும் 4 பேரை காணவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபற்றி தீயணைப்புத் துறை அதிகாரி அதுல் கார்க் கூறும்போது, காலை 8.30 மணிக்கு தகவல் வந்ததை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. உள்ளே சிக்கிக்கொண்ட 6 பேரை மீட்டோம். மாயமான 4 பேரை தேடி வருகிறோம். தீ இப்போது கட்டுக்குள் வந்திருக்கிறது’ என்றார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.