வரதட்சணை கொடுமை – கணவருக்கு அதிரடி தீர்ப்பு

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கணவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே…

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கணவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு சசிகலாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வந்துள்ளார்.

 

இதனால் மனமுடைந்த சசிகலா, கடந்த 2014-ம் ஆண்டு தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். பின்ன அவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வரதட்சணை கொடுமை என்று வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர்.

 

இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கணவர் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும். இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

 

மேலும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்து உயிரிழப்புக்கு தூண்டியதாக கணவரின் தாய் மற்றும் அவருடைய உறவினர்கள் என 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.