இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு வீடாக மக்களை அணுக வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 100கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய 40 மாவட்டங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகிகளுடன் கலந்துரையாடி பிரதமர் மோடி, தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க வீடு வீடாக செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களின் 40 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதில் தோய்வு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் மாவட்ட அலுவலர்கள் உள்ளூர் மத தலைவர்களின் உதவியுடன் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுவரை மக்களை தடுப்பூசி முகாம்களை நோக்கி அழைத்து வந்துள்ளோம். தற்போது, நாம் வீடு வீடாக செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
#WATCH | At review meet with districts where COVID vaccination could pick pace, PM says, "You've major challenge of 'rumour' & 'misconception among people'. A big solution is to make them aware. You can take help of local religious leaders, make their short videos & circulate it" pic.twitter.com/2U5BQHm9D4
— ANI (@ANI) November 3, 2021
அதேபோல முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு செலுத்துவதற்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








