பெங்களூரு: விஜய் சேதுபதி மீது தாக்குதல்

கேலி செய்ததை தட்டிக்கேட்டதால் பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றுக்காக செவ்வாய்கிழமை இரவு விமானம்…

கேலி செய்ததை தட்டிக்கேட்டதால் பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றுக்காக செவ்வாய்கிழமை இரவு விமானம் மூலம் பெங்களூர் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த சிலர் விஜய் சேதுபதியை கேலி செய்துள்ளனர்.

இதனால் அந்த நபர்களுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விமான நிலைய போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து விஜய் சேதுபதியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஓடிவந்து விஜய் சேதுபதியின் முதுகில் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில், விஜய் சேதுபதி நிலைதடுமாறிய நிலையில், தாக்குதல் நடத்திய நபரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

https://twitter.com/HalleyKarthik/status/1455928537622319108

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.