தீபாவளி; குப்பைகளை அகற்ற சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கொண்டாட்டங்களின்போது வெளியேற்றப்படுகிற குப்பைகளை அகற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி…

தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கொண்டாட்டங்களின்போது வெளியேற்றப்படுகிற குப்பைகளை அகற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகின்ற குப்பையை அகற்றுவதற்காக சுமார் 358 கனரக / இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் மற்றும் 3,725 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் அன்றாடம் தூய்மை பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசு குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்படும்.

அவ்வாறு சேகரமாகும் பட்டாசு குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மன்ட் லிமிடெட் நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று முறையாக அகற்றுவதற்காக 33 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.