முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வீடு வீடாக பிரச்சாரம் ; அமைச்சர்கள் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டனி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில்
வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டனி தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன்
ஈவேரா கடந்த நான்காம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து கிழக்கு
சட்டமன்றம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் பல்வேறு
மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்த போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற
தொகுதிக்கும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸும், அதிமுகவும் நேரடியாக களம் காணும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைச்சர்கள் சு முத்துசாமி, கே என் நேரு ஆகியோர் தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று திருமகன் ஈவேரா காலமானதால் காங்கிரஸ் கட்சியில் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளருக்கு தங்களது வாக்கினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

பெரியார் நகர் பூங்கா பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைக்குச் சென்ற அமைச்சர் முத்துசாமி காய்கறி வியாபாரம் செய்பவரிடம் வாக்குகளை சேகரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு கூறியதாவது..

“ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்துள்ளோம். கழகத் தோழர்களுக்கு உதவியாக பொது மக்களிடம் தேர்தல் பணிகளை செய்ய இருக்கின்றோம். நிச்சயமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதற்கு முழுமையாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் பணியாற்றுவோம்.

தேர்தலில் மக்கள் கோரிக்கைகளை தேர்தல் முடிந்ததும் செய்து தருவோம் ஏற்கனவே மக்களுக்கான தேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம். இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு தான் வரி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. வளர்ச்சி பணிகளுக்கு ஏற்ப வரி வசூலிப்பது அவசியம். எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். நாங்கள் மக்களுக்கு செய்த பணிகளையும் சாதனைகளையும் சொல்லி வாக்கு சேகரித்து
வருகின்றோம்” என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ஈரோடு கிழக்கு காங் வேட்பாளர் யார் ?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரசு சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜனிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சஞ்சய் சம்பத்துக்கு சீட் கொடுக்க ஒரு தரப்பினரும், மக்கள் ஜி.ராஜனுக்கு சீட் கொடுக்க மற்றொரு தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் திங்கட்கிழமைக்குள் காங்கிரசு வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விண்வெளி பறவை கல்பனா சாவ்லாவிற்கு 60வது பிறந்தநாள்

Gayathri Venkatesan

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்

G SaravanaKumar

கோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனை

Arivazhagan Chinnasamy