காசிமேடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னை காசிமேடு பள்ளம் பகுதியில் பெண்கள் இருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காசிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்திரா(37) சுதா(38) ஆகிய பெண்களின் இருப்பிடத்திற்கு சென்ற
போலீசார் சோதனை செய்த போது, இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்
சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்ட பெண்கள் தங்களுக்கு யாராவது தொலைபேசி வாயிலாக யாராவது
தொடர்பு கொண்டால் கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது விசாரணையின் போது கஞ்சா விற்பனை செய்வது ஏதோ அரசால் அங்கிகரீக்கப்பட்ட வர்த்தகம் என்பது போல் இரு பெண்களும் பேசியது போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.







