அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் – அதிமுக பொதுச்செயலாளர் #EPS!

அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தை இனிமேல் பயன்படுத்தாதீர்கள்; நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின்…

அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தை இனிமேல் பயன்படுத்தாதீர்கள்; நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மூத்த தலைவர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்சி அலுவலகம் முன் கூடிய தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான். 6 முக்கிய தலைவர்கள் என்னிடம் வந்து, நீக்கப்பட்டவர்களை இணைக்கச் சொன்னார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம் தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது,”

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.