முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணீடாதீங்க.. ’லியோ’ விருந்து காத்திருக்கு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

நடிகர் விஜய் நடிப்பில் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில்…

நடிகர் விஜய் நடிப்பில் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும்,  காலை 09.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது.

லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும்,  அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மேலும், இந்த அரசாணை தொடர்பாக திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் நேர்காணல் ஒன்றில், “ரசிகர்கள் முன்கூட்டியே திரையரங்குகளுக்கு வந்துவிடுங்கள். முதல் 10 நிமிடங்கள் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். இதற்காகதான் 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் உழைத்து இருக்கிறோம். கடந்த அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை அதற்காகதான் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இது அநேகமாக கழுதைப்புலி கிராபிக்ஸ் காட்சிகளாக இருக்குமோ என இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.