நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதை பழக்கத்திற்கு எதிராக ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர்.
போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம், ஜூலை மாதம் முழுவதும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
அதேபோல, திருப்பூர் பெரிய கடைவீதியில் உள்ள கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமையில் 2,600 மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் நடத்தும் “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சிhttps://t.co/WciCN2AH8n | #News7TamilAnbuPalam | #SayNoToDrugs | #DrugsAwareness | #News7TamilUpdates pic.twitter.com/k9azbv58wl
— News7 Tamil (@news7tamil) July 7, 2022
ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் முன்னெடுத்துவரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.








