இளவரசி லொகேஷன் அனுப்புங்க… த்ரிஷாவை கலாய்த்த கார்த்தி!

இளவரசி லோக்கேஷன் அனுப்புங்க… என்று நடிகை த்ரிஷாவை கிண்டல் செய்து கார்த்தி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம் பொன்னியின்…

இளவரசி லோக்கேஷன் அனுப்புங்க… என்று நடிகை த்ரிஷாவை கிண்டல் செய்து கார்த்தி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரு பாகங்களாக எடுத்துள்ளார். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசைப்புயர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்துக்கான புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, இன்று குந்தவை கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். பொன்னியின் செல்வனின் கதைப்படி அண்ணன் ஆதித்த கரிகாலன் அளிக்கும் ஓலையை வந்தியத்தேவன் அதவாது கார்த்தி, குந்தவையிடம் அதாவது த்ரிஷாவிடம் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், த்ரிஷாவின் போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்தி, இளவரசி உங்க லோகேஷனை அனுப்புங்க, உங்கள் அண்ணனின் ஓலையை உங்களிடம் கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டு கலாய்த்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.