இந்திய பாலிவுட் சினிமாக்களை காப்பி அடித்து பாகிஸ்தானில் திரைப்படம் எடுக்க வேண்டாம் என்று பாகிஸ்தானின் சினிமா துறையினருக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற குறும்பட விழா ஒன்றில் பேசிய இம்ரான் கான் கூறியதாவது:
“பாகிஸ்தானின் சினிமா துறையினர் பாலிவுட் சினிமாவால் ஈர்க்கப்பட்டு, இன்னொரு நாட்டின் கலாசாரத்தை காப்பி அடிக்கத் தொடங்கியதில் இருந்துதான் தவறுகள் நடக்கத் தொடங்கின. எனவே நான் ஒரு முக்கியமான விஷயத்தை அறிவுறுத்த விரும்புகின்றேன். சினிமாதுறையை சேர்ந்த இளைஞர்கள், ஒரிஜினலான கதையம்சங்களைக் கொண்ட படங்கள்தான் விற்பனையாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காப்பி அடித்து வெளியிடப்படும் படங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாகிஸ்தான் சினிமா துறையினர், புதிய வழியில் சிந்திக்க வேண்டும். இளம் சினிமா இயக்குநர்கள் புதிய கதை களத்துடன்சிந்திக்க வேண்டும். தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சம் இல்லாமல் செயல்பட வேண்டும். என்னுடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள். தோல்வியை நினைத்துப் பயந்தால் வெற்றி பெற முடியாது. அதே போல பாகிஸ்தானின் மென்மையான அம்சம் முன்னெடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்பேசினார்.