விஜய் ஆண்டனி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடியோ கால் மூலம் ரசிகர்களுடன் பேசுவார் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைதொடர்ந்து இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பிச்சைக்காரம் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் சூழ்நிலையில், அதை நிராகரிக்கும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், 2 வாரங்களுக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், கூடிய விரையில் அவர் வீடியோ கால் மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி குறித்து தவறான வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொள்வதாக அறிக்கையில் இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.