புத்தகம், அதுவே மனித மனங்களுக்கு “புத்துயிரையும் ”புது” அகத்தையும் உணர்த்தும் சக்தி படைத்தது. தமிழ் திரைப்பட வரலாற்றில் படிப்பை பற்றியும், புத்தகங்களை பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஒரு எடுத்துக்கட்டுக்காக ”படி டா பரமா” எனும் வாசகம் மிகவும் பிரபலமானது. கைபேசி மீது மோகம் கொண்டிருந்த இளைஞர்களின் எண்ணம் தற்பொழுது புத்தக வாசிப்பு மேல் சென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சென்னை நந்தனத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள அனைத்து தரப்பினருக்குமான அனைத்து வகை புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. வரலாறு, ஆன்மீகம், அரசியல், பொது அறிவு, இலக்கியம் சார்ந்த பல புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும், அதில் ஒரு புத்தக அரங்கம் மட்டும் தன்னந்தனியாக தெரிந்தது. வாழ்வில் பல கனவுகள் மற்றும் பல்வித கற்பனைகளோடு இருக்கும் பல்லாயிரம் இளைஞர்களின் பிரதிபலிப்பாக அது இருந்தது. மற்றவைகளில் இருந்து இந்த அரங்கு எந்த வகையில் வேறுபடுகின்றது, மாறுபடுகிறது? அப்படி என்ன இதில் வித்தியாசமாக உள்ளது என்பது பலர் மனதில் எழும் பொதுவான கேள்வியே!
ஆம்.. இதில் வித்தியாசம் இருக்கிறது. முதலில் கூறியது போல இந்த புத்தக அரங்கம் முழுக்க முழுக்க பல்லாயிரம் இளைஞர்களின் பிரதிபலிப்பாக இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் டீனேஜ் (teenage) பிள்ளைகளின் மனம் மற்றும் உள்ளம் சார்ந்த பிரச்னைகளை வெளிப்படையாக பேசும் ஒரு விஷயமாக இருந்தது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பார்வையில் ஒரே எண்ணத்தை கூர்நோக்கி இருந்தது. சரி இதற்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம் ?
ஒவ்வொரு இளம் வயது பிள்ளையின் மனக்குமுறலாய் அந்த புத்தக அரங்கு விளங்கியது. அவர்கள் மனதை உறுத்தி கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் அதில் ஏதோ ஒரு புத்தகம் வெளிகொணர்ந்தது. அதற்கு மருந்தாகவும் அந்த புத்தகம் விளங்கியது. பேச, சிரிக்க, கேட்க தயங்கிய விஷயங்களை அந்த அரங்கம் சிறப்பாக கையாண்டது.
அதுவெறும் புத்தக கண்காட்சியாக மட்டும் இல்லாமல், இளவட்ட பிள்ளைகளால் அந்த அரங்கு நிறைந்து இருந்ததால், ஒரு பள்ளி, கல்லூரிக்கு சென்ற அனுபவத்தை அது வழங்கியது. அங்கு இருந்த இளம் எழுத்தாளர்கள் புத்தகத்தை விற்பதைக்காட்டிலும் அதை வாசித்து, நாம் விரும்பும் அளவுக்கு அதனை விளக்கும் கண்ணோட்டம் மிகவும் புதுமையாகவும், இயல்புக்கு அப்பாற்பட்டும் இருந்தது. இளவட்ட பிள்ளைகளின் மனக்குமுறலுக்கும், அவர்களது கேள்விகளுக்கு, ஒரு நல்ல விளக்க உரையை கொடுத்து, மனக்காயங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் அவை ஒரு நல்ல மருந்தாக, இருந்து உற்ற தோழனாக இருந்தது.
வாரிசு திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில்ராஜூ இந்த திரைப்படத்தில் எல்லா அம்சங்களும் இருக்கு என்று பேசியிருப்பார். அதேபோல இளைஞர்களின் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் இந்த அரங்கில் இருக்கும் புத்தகங்கள் அதற்கு மருந்தாக உள்ளது. Depressionஆ.. மருந்து இருக்கு, Love Failureஆ.. மருந்து இருக்கு, lifeல Success இல்லையா மருந்து இருக்கு, Money Problemஆ.. மருந்து இருக்கு, Lonelinessஆ.. மருந்து இருக்கு… Finally Youngstersக்கு தேவையான எல்லா புத்தகமும் இங்கு இருக்கிறது.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா (Cobra) திரைப்படத்தில் ஒரு பாடலாக, ஆதீரா எனும் பெயரை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கோ அந்த வார்த்தைக்கு இங்கு ஒரு மன வடிவமே கொடுத்துள்ளனர். அப்பொழுது இந்த 120 & 121வது புத்தக அரங்கம் இளைஞர்களுக்கானது மட்டும் தானா?, என்றால் அது தான் இல்லை. உடலளவில் முதிர்ச்சி பெற்றவர்களும், மனதளவில் குழந்தையாக இருப்பவர்களும் இங்கு வந்து தங்களது எண்ணங்களை புதுப்பித்து கொள்ளலாம்.
- ஆண்ட்ரு, நீயூஸ் 7 தமிழ்.