கட்டுரைகள் விளையாட்டு

விமர்சனங்களை டைரி குறிப்பாக மாற்றி, பதில் சொல்கிறாரா கிங் கோலி?


நந்தா நாகராஜன்

கட்டுரையாளர்

ஒரு முறை ஒரு விஷயத்தில துவண்டுபோய்விட்டால், அதை நினைத்து வருத்தப்படுவதை தவிர, திரும்ப அந்த விஷயத்தோட போராட விரும்ப மாட்டோம்! அடிக்க அடிக்க தாங்கும் மன நிலையையும், எல்லா சூழ்நிலையையும் ஏற்று கொள்கின்ற மன பக்குவத்தையும் ஒருவர் தன் வாழ்க்கையில கற்று கொள்ள குறைஞ்ச பட்சம் 40 முதல் 50 வயது வரை ஆகும்.

ஆனால் 34 வயதிலேயே அதனை தகர்த்தெறிந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. விளையாட்டு வீரராக இருக்கும் போது விமர்சனம், கேப்டனா இருந்தப்போது விமர்சனம், ரன் எடுத்தாலும் விமர்சனம், எடுக்கவில்லை என்றாலும் விமர்சனம் பலதரப்பட விமர்சனங்களை தொடர்ந்து எதிர்கொண்டிருந்தார். இப்போதோ, வயதாகிறது. இவர ஷார்ட் பார்மேட்ல எதுக்கு வைத்துள்ளீர்கள் என்கிற  விமர்சனம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட கால இடைவெளியில, நாக்கு நுனியில உப்பு வைத்தால் உடல் சிலிர்த்து கரிக்கிற மாதிரி தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி அளித்துள்ளார் கிங் கோலி!

கிரிக்கெட்டை விளையாட்டு என்பதை தாண்டி இருவேறு வீரர்களின் மூளைக்கு வேலை கொடுக்கின்ற ஒன்று என்று நாம் என்றைக்குமே நினைத்து கூட பார்த்தது கிடையாது. ஆனால் அதை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிற ஒரு விளையாட்டு வீரரால் தான் அவ்வாறு நினைக்க முடியும். பல விதமான சூழல்களில், தன் மீதான விமர்சனங்களை எல்லாம் டைரி போட்டு எழுதி வைத்து, அதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கொண்டு இருக்கிறார் கிங் கோலி!

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் விராட் கோலி அடித்த சதம் தான், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடித்த கடைசி சதமாக இருந்தது. அதன் பிறகு அவருடைய விளையாட்டு, துரதிர்ஷ்டத்தால ஸ்டாக் மார்க்கெட்ல சரிவு வருகிற மாதிரி மொத்தமா இறங்கிபோனது.

ஒரே சீரான இடைவெளியில் தன்னுடைய டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியால் 2019ம் ஆண்டுக்கு பிறகு சரியாக விளையாட முடியவில்லை. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என்று எல்லா பக்கத்தில இருந்தும் விராட் கோலிக்கு எதிராக விமர்சனங்கள் வர ஆரம்பித்தது.

2019ம் ஆண்டில் 11 டெஸ்ட் இன்னிங்ஸ்ல விளையாடிய விராட் கோலியின் சராசரி ரன்கள் 68 ஆகவும், 2 செஞ்சுரி, 2 அரைசதத்தோட 612 ரன்கள் எடுத்து இருந்தார். அதில் குறிப்பாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த 254 ரன்களும் இதில் சேரும்.

2020ல் கோலிக்கு கஷ்ட காலமா போச்சு. அதாவது அவர் விளையாடியது 6 இன்னிங்ஸ் என்றாலும் அவருடைய சராசரி ரன்ரேட் 19.33 ஆவும் சரிந்தது. குறிப்பாக இந்த 6 இன்னிங்ஸ்ல அவர் அடிச்ச டெஸ்ட் ரன்கள் 116 மட்டுமே. 2011ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் தடம் பதித்ததில் இருந்து, இதுதான் விராட் கோலியோட குறைந்த ரன்னாவும் இருந்தது.

இந்த கால கட்டம் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதை பாதித்தாலும், ஒருநாள் போட்டிகளில் 47.58 ரன் ரேட்டும், டி20 போட்டிகள்ல 36.87 ரன் ரேட்டும் இருந்தது. ஒரு பக்கம் இது ஏற்று கொள்ள கூடிய விஷயமா இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இனி பங்கேற்க மாட்டார் என நினைத்துக் கொண்டு இருந்த அவரின் விமர்சகர்கள் மத்தியில, அதை உடைக்கிற விதமாக, 2021ல் நல்ல கம் பேக் கொடுத்தார் விராட் கோலி. 19 இன்னிங்ஸில் 28.21 சராசரி கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும் 2021ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 536 ரன்கள் விளாசி தன் மீதான விமர்சனங்களை கொஞ்சம் தட்டி விட்டார் விராட் கோலி.

2022 வருஷம் முழுவதும் 26.50 சராசரியோட கொஞ்சம் கொஞ்சமா ஆக்சிலரேட் பண்ணின கோலிக்கு அடுத்த ஒரு மந்தமான வருஷமாக 2022 அமைந்தது. 11 இன்னிங்ஸ்சில் 265 ரன்கள் எடுத்த அவர்,  ஒருநாள் போட்டிகளில் 2 வருஷத்திற்கு பிறகு ஒரு சதத்தை பதிவு பண்ணார். 27.45 சராசரியில 302 ரன்கள் விளாசி, கொஞ்சம் கொஞ்சமா விமர்சனங்களை மாத்தி எழுதிட்டு இருந்த தருணமும் அதுதான்.அதற்கு முதல் முக்கிய காரணமாக டி20 போட்டிகள்ல 20 இன்னிங்ஸ்சில் 50 ரன்களுக்கு விளையாடி 781 ரன்கள் குவித்தார். அதுவும் கடந்த வருஷம் விராட் கோலியோட ஒரு கம்பேக் பேக்கேஜ் தான். தொடர்ந்து இந்த வருடத்தில் நுழைஞ்ச விராட் கோலியோட அப்ரோச் முரட்டுத் தனமாக இருந்தது.

அதாவது தன் மீது வைக்கப்பட்ட ஒவ்வொரு விமர்சனத்தையும் டைரி குறிப்பா எழுதி வைத்து, அவை ஒவ்வொன்னுக்கும் பதில் சொல்லி வருகிறார் கிங் கோலி. இந்த வருஷத்தின் தொடக்கத்தின் முதலிலேயே ஹோம் சீரிஸ்ல வெறித்தனமான ஒரு கேம ஆட ஆரம்பித்த கோலி, விட்டுப் போன பழைய பார்ம தப்பாம கொண்டு வந்திருக்காருனு தான் சொல்லனும்.

இந்த வருஷம் தொடங்கியதில் இருந்து ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிராக 113 ரன்கள், இலங்கைக்கு எதிராக 113, அதே தொடரில் இன்னொரு போட்டியில 166 ரன்கள் என விளாசி, டி20 போட்டிகளில் விட்டு போன பார்ம மீட்டுட்டு வந்து 8 அரைசதம், முதல் சர்வதேச டி20 சதம் அடித்து அசத்தினார்.ஒரு வழியா தம் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் எல்லாத்தையும், போர் கண்ட சிங்கம், யார் கண்டு அஞ்சும் அப்படின்னு எல்லாரோட இமாஜினரி ஹீரோவாகவும், ரியல் ஹீரோவாகவும் மாறினார் விராட் கோலி. ஒரு 3 வருஷம் முன்னாடி எந்த மாதிரியான விராட் கோலிய வெறியோட, ரன் மீதான வேட்டைய பாத்தோமோ, அதே வெறிய இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்போட களத்தில காட்டிட்டு இருக்காரு கிங் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் எப்ப பார்ம்க்கு வருவார்னு ஏக்கத்தில இருந்த கோடி கணக்கான ரசிகர்களுக்கு விருந்து கொடுக்குற மாதிரி, 1207 நாட்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிகள்ல சதம் விளாசி எல்லாத்துக்கும் ஒரு எல்லையில்லாத சந்தோஷத்தையும், நம்பிக்கையும் கொடுத்து இருக்கிறார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை 4 வது டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட், 186 ரன்கள் எடுத்து இந்தியாவோட நிழலா ஒரு சம்பவத்தை பண்ணினாரு கோலி. ஆனா ஒன்னு மட்டும் உண்மை. இதே பார்ம் இந்த வருஷம் முழுக்க இருந்தது அப்படின்னா, 2016, 2017, 2018 ல எந்த மாதிரியான விராட் கோலிய பாத்த்தோமோ, அதே மாதிரியான விராட் கோலிய நம்ம பாக்கலாம்.

இப்போவே ரிக்கி பாண்டிங் சாதனை, சச்சின் டெண்டுல்கர் சாதனை, பிரெயின் லாரா சாதனைனு பல விதமா முறியடிச்சிட்டு இருக்கிற கிங் கோலியோடா தாகம் இன்னும் தீரல. பொதுவாவே தன் மீது வைக்கிற விமர்சனங்களை பாத்து அதில் துவண்டு போய், அதனால அழிஞ்சு போனவங்க நிறைய பேரை நாம பாக்குறப்போ, முழு பாரத்தோட, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் செக் லிஸ்ட் போட்டு, அது ஒவ்வொன்னுக்கும் பதில் சொல்லிட்டு வருகிறார் கிங் கோலி!

  • நந்தா நாகராஜன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சையத் முஷ்டாக் அலி கோப்பை பைனல்: கடைசி பந்தில் தமிழ்நாடு த்ரில் வெற்றி

Halley Karthik

உலக அளவிலான காவல்துறை விளையாட்டுப் போட்டி – 4 தங்கம் வென்ற சென்னை போலீஸ்!

Arivazhagan Chinnasamy

இந்தியாவுக்கு பாதகமான மழை; ஒரு நாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

G SaravanaKumar