ஒருவரை எப்படி பயமுருத்த வேண்டும் என்ற வித்தையை காங்கிரசைப் பார்த்துக் கச்சிதமாகப் பின்பற்றுகிறது பாஜக என்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ராய், அகிலேஷ் யாதவின் தனிப்பட்ட செயலாளர் ஜைனேந்திர யாதவ் மற்றும் வேரொரு கட்சியின் தலைவர் மனோஜ் யாதவ் ஆகிய மூவரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனால் தேர்தல் நடக்கவிருக்கும் இந்த வேளையில் பாஜகவினர் தங்கள் கட்சியின் மனநிலையை சீர்குலைப்பதாகவும் மக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்.
மேலும் சோதனையின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சரியாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் வருமான வரித்துறையினர் இந்த சோதனை நடத்துவது ஏன்? இப்படி செய்வதானால் மட்டும் நாங்கள் துவண்டு விடுவோம் என்று ஒருபோதும் எண்ணிவிட வேண்டாம். பொதுவாக ஒருவரை அச்சுறுத்த இப்படியெல்லாம் சொதனை மேற்கொள்வது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆனால் தற்போது அந்த வழக்கத்தை பாஜகவும் பின்பற்றுவது வேடிக்கையாக உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “எங்களிடம் எவ்விதமானக் குற்றப் பின்னனியோ அல்லது கருப்புப் பணமோ கிடையாது. மக்களுக்கு நண்மை செய்வதை பாஜக அரசால் ஏர்றுக்கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது. அதனாலேயே இப்படிபட்ட சோதனைகளை தேர்தல் நேரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். மேலும் இவர் 2014ம் ஆண்டு மக்களவையின் உறுப்பினராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: