அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், கிக் பாக்ஸிங் ஒரு தற்காப்பு கலை என்றும் பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ள கிக் பாக்ஸிங் உதவும் என்றும் கூறினார். அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.








