முக்கியச் செய்திகள் தமிழகம்

காணொலி மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம் 

காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
தமிழக முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலால் அதிக அளவில்  குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் , இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் உரியச் சிகிச்சை விரைவாக
அளிப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு
பகுதியாகத் தமிழகம் முழுதும் 1000 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடங்க
அரசு முடிவு செய்திருந்தது.
அதனை  இன்று  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி   அடுத்த கோளப்பன்சேரி ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று 1000 காய்ச்சல் சிறப்பு  மருத்துவ முகாமினை  தொடங்கி வைத்தார்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் ,பெண்கள் எனக்  கிராம  பொதுமக்கள் பங்கேற்றுக் காய்ச்சல் அறிகுறி  உள்ளதா எனப் பரிசோதனை செய்தனர். இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது.
பருவ காலம் மாற்றம் என்பதால் காய்ச்சல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னையில் 100 தமிழகம் முழுவதும் 900 இடங்கள் எனக் காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. 353 பேர் எச்1 என்1 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 371 ஆக இருந்தது. இந்த காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும் 294 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
9 பேர் அரசு மருத்துவமனையிலும் 53 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி  சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை இறந்து பிறந்தது.
நிறைமாத கர்ப்பிணியான அவர் குழந்தை தலைகீழாக இருப்பதாகவும் ஸ்கேன் எடுக்க
மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள். அவர் ஸ்கேன் எடுத்துவிட்டு தனது உறவினர்
இறந்து விட்டதால் அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு இரண்டு நாட்கள்
கழித்து பிரசவத்திற்காக வந்தார் இதில் தாயின் உயிர் காப் பாற்றப்பட்டுள்ளது.
இதில் காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும்  மக்கள் நல்வாழ்வுத் துறை , நகராட்சி துறை,ஊராக உள்ளாட்சித் துறை அமைச்சர்கள்   ஒருங்கிணைந்து 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுக் காய்ச்சல் குறித்துக் கண்காணிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுதும் இந்த காய்ச்சலால் தற்போது 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல்: அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகும் அம்பயரின் முடிவுகள்

நிறைவேறியது CUET-க்கு எதிரான தனித் தீர்மானம்

Arivazhagan Chinnasamy

அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

Gayathri Venkatesan