உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு 8 மணிநேர தூக்கம் இன்றியமையாதது ஏன் என்பதனை விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
1. நல்ல தூக்கம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்:
தூக்கமின்மையை அனுபவிக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் முறையே 55% முதல் 89% பேர் உடல் பருமனாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே 8 மணி நேரத் தூக்கம் எடையைக் கட்டுப்படுத்த உதவும் எனச் செல்லப்பட்டுள்ளது
2. ஆரோக்கியமான தூக்கம் உங்கள் செறிவை மேம்படுத்தும்:
செறிவு, அறிவாற்றல், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் உட்பட உங்கள் மூளையின் செயல்பாட்டின் அனைத்து அம்சங்களுக்கும் தூக்கம் முக்கியமானது. இதனால், நீங்கள் நாள் முழுவதும் அதிக கவனத்துடன் செயல்பட உதவும்.
3. செயல்திறனை மேம்படுத்துகிறது:
உதாரணமாக அதிக நேரம் தூங்கும் கூடைப்பந்து வீரர்களின் வேகம், துல்லியம், எதிர்வினை நேரங்கள் மற்றும் மனநலம் ஆகியவை கணிசமாக மேம்படுவதாகக் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்!’
4. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது:
சரியான அளவு தூங்கும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகுவதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதற்காகக் குறைந்த நேரம் தூங்குவது பெருமையான விஷயம் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
5. போதுமான தூக்கம் மன அழுத்தைப் போக்கும்:
போதுமான தூக்கம் இயற்கையாகவே மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. மனச்சோர்வு போன்ற சில மனநலப் பிரச்சினைகள் தூக்கக் கோளாறுகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
6. மனநிலையை மேம்படுத்தும்:
உதாரணமாக சில நாட்கள் தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகு, நீங்கள் வேலையில் இருக்கும் சக ஊழியருடன் எரிச்சல் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எனவே, போதிய தூக்கம் சமூக தொடர்புகளை மேம்படுத்தும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.








