மீண்டும் நம்மை ‘பண்டோரா’ கிரகத்திற்கு அழைத்துச் செல்கிறர் ஜேம்ஸ் கேமரூன்

கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த காலத்தில்  குறித்த நேரத்தில் வெளியாகும் எனத் தயாரிப்பு குழு கூறியுள்ளது.இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும்…

கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த காலத்தில்  குறித்த நேரத்தில் வெளியாகும் எனத் தயாரிப்பு குழு கூறியுள்ளது.இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் அவதார். ரூ.1,500 கோடி பட்ஜெட், 3 டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படத்துக்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இதையடுத்து, அவதார் 2 படத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கின. 2014-ம் ஆண்டே அவதார் 2 வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.


அவதாரின் தொடர்ச்சியான அவதார் 2 திரைப்படம் 2020 டிசம்பரில் திரைக்கு வரும் என்றும், பின்னர் படத்தின் 3வது மற்றும் 4வது பாகங்கள் இரண்டு வருட இடைவெளியில் வெளியாகும் என்றும் அறிவிப்புகள் வெளியாகின.


படத்தின் கதை நேர்கோட்டில் நகர்வதால் முதல் பாகம் பார்த்தால் மட்டுமே அடுத்தடுத்த பாகங்களின் கதையைப் புரிந்துகொள்ள இயலும். எனவே இப்படத்தின் முதல் பாகத்தை மீண்டும் திரையிடவுள்ளனர். மேலும், படத்தை 4k தரத்தில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதற்கான போஸ்டரை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்க்காதவர்களும், படத்தைத் திரையரங்கில் பார்க்காதவர்களும் இப்படத்தைத் திரையில் காண படக்குழு இந்த மறு திரையிடலைத் திட்டமிட்டுள்ளது.


அவதார் 2 இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்பதை தயாரிப்பாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 160க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதோடு, 3D, IMAX, PLF, high-res, high frames-per-second and in variable sound system including Dolby, Christie and Barco ஆகிய தொழில்நுட்பங்களின் திறன்மிக்க அம்சங்களை இப்படம் கொண்டுள்ளது.


கோவிட் தொற்றால் 3வது மற்றும் 4வது பாகங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு டிசம்பர் 2022 மற்றும் டிசம்பர் 2024க்கு தள்ளிச் சென்றது. தற்போது தொற்று குறைந்த நிலையில் அடுத்தடுத்த பாகங்களின் படப்பிடிப்பு குறித்த காலத்தில் முடித்து, குறித்த நேரத்தில் வெளியாகும் எனத் தயாரிப்பு குழு கூறியுள்ளது. அதனால் 4வது மற்றும் 5வது பாகங்களின் படப்பிடிப்பு அடுத்தடுத்து டிசம்பர் 2026 மற்றும் டிசம்பர் 2028 இல் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாகி வரும் அவதார் 2 படத்தை வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் டிரைலர் கடந்த மே முதல் வாரத்தில் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

படத்தின் பிரமிக்க வைக்கும் டிரெய்லர் காட்சிகளை, “சினிமாகான் 2022” என்ற நிகழ்ச்சியில் திரையிட்டனர். மேலும் அவ்வப்போது படத்தின் புகைப்படங்களும் வெளியாகி சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், “அவதார் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காணலாம். ஒரு திரைப்படத்தால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அந்த வரம்புகளை எல்லாம் இது நிச்சயம் தாண்டிவிடும்” என்றார்.

“உலகம் முழுவதையும் தொடர்புப்படுத்தக் கூடிய விஷயங்களைக் கதையில் கொண்டு வருவதுதான் கேமரூனின் பலம். அந்த மேஜிக்கை இந்த முறையும் செய்திருக்கிறார்”என படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் தெரிவித்துள்ளார்.

-செ.யுதி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.