சிம்பு 48 படத்திற்காக கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெந்து தணிந்தது காடு. பத்து தல உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சிம்பு 48 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த தேசிங்கு பெரியசாமி சிம்பு 48 படத்தை இயக்குகிறார் .
அவர் X தளத்தில் சிம்புவும் தானும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் positive Mind Positive Vibes என அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்த புகைப்படத்தில் சிம்புவின் முகம் காட்டப்படவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோச்சைடையான் படத்தில் நடித்துள்ளார். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதனிடையே கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







