பயணிகளிடம் ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் : அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்!

பயணிகளிடம் இருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி…

பயணிகளிடம் இருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2016 – 2017ம் நிதியாண்டில் 354 கோடியே 29 லட்சம் அளவிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

2019-20ம் நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 3.62 லட்சம் கோடியாக குறைந்தது.

2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நிலையில், ரூ.2,000 நோட்டுக்களை பயணிகளிடம் இருந்து நாளை மறுநாள் (28-ஆம் தேதி) முதல் வாங்கக்கூடாது என்று கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.