மணிப்பூர் கலவரத்தில் மாயமான மெய்தி இன மாணவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை காரணமாக முடக்கப்பட்ட இணைய சேவை சமீபத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வன்முறையின்போது மாயமான 2 மாணவர்கள் இறந்த நிலையில் கிடந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
உயிரிழந்த இருவரும் மெய்தி இனத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இந்நிலையில், மெய்தி இன மாணவர்களை குகி இனத்தவர்கள் கொலை செய்ததாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த அம்மாநில காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.







