துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியா மிருணாள் தாக்கூர் நடித்தார். முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஹனு ராகவபுடி இயக்கிய இந்த தெலுங்கு படம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
சீதா ராமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிங் ஆப் கோதா என்ற புதிய படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
https://twitter.com/rameshlaus/status/1621419358479327232?t=wv6gPlkYs39_FDAgYO_QIw&s=08
கிங் ஆஃப் கோதா திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, துல்கர் சல்மான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-ம.பவித்ரா







