பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்து எடுக்கப்பட்டுள்ளது. அப்போதையை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. மேலும் உண்மைக்கு மாறாக இந்த ஆவணப்படம் இருப்பதாக கூறிஇந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தடை உத்தரவை மீறி அந்த ஆவணப்படத்தை திரையிட்டும், திரையிட முயற்சித்தும் பல மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டனர். பிபிசி ஆவணப்படத்திற்கு தடைவிதித்த மத்திய அரசு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது பிபிசி ஆவணப்பட தடையை நீக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்கவும் ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான அசல் உத்தரவையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.