விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் ’வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஷியாம், யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியது. பொங்கலை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில், அதே நாளில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படமும் மாபெரும் வெற்றியை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. மேலும், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தை எந்த ஓடிடி தளத்தில் வெளியிடப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதி 67 படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளது.
இப்படி பரபரப்பாக உள்ள இந்த சூழலில் வாரிசு திரைப்படம் ’சன் நெக்ஸ்ட்’ ஓடிடி தளத்தில் பிப்ரவரி 22ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வாரிசு படக்குழு தரப்பில் இதுவரை ஓடிடி ரிலீஸ் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் அடுத்தடுத்த புதிய படங்களின் அப்டேட் இருந்தாலும், விஜய் மற்றும் அஜித் படங்கள் திரையரங்கில் வெளியானாலும், ஓடிடியில் வந்தாலும் எதிர்பார்ப்புகள் எப்போதும் குறையாதது தனி கெத்து தான்.
– சுஷ்மா சுரேஷ்.