நடிகை ராதிகா நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ’தாய் கிழவி’. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
தாய் கிழவி திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்லவரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி 10 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.








