‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ – நீதிபதிகள்

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட வழக்கு விசாரணையின்போது ‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட…

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட வழக்கு விசாரணையின்போது ‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னவ் கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் தாஜ்மஹாலின் உண்மை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தொல்லியல் ஆய்வுத்துறையில் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு காணங்களுக்காக அந்த அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவதாக விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் சொல்லப்பட்டது. இதனால், பூட்டப்பட்டுள்ள அந்த அறைகளில் பல விசயங்கள் மறைந்துள்ளன, அது என்ன என்பது பொது வெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும், குறிப்பாக முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தைக்கு எழுதிய கடிதம் அதில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய உத்தரபிரதேச அரசு வழக்கறிஞர், வழக்கை தற்போது இந்த நீதிமன்றத்தில் தொடுக்க மனுதாரர்களுக்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்தனர். ஏற்கனவே ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு SUIT வழக்கு நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த மனுதாரர், இந்த வழக்கில் நிலம் யாருடையது என்று நான் கோரவில்லை, மாறாக தாஜ்மஹாலில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவர வேண்டும், குறிப்பாக பூட்டப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

அண்மைச் செய்தி: ‘நிலைமை கைமீறி சென்றால் மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது – அமைச்சர் அன்பில் மகேஷ்’

தாஜ்மஹாலின் வயதை சந்தேகிக்கிறீர்கள் என்றால், ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டவில்லை எனக்கூறுகிறீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இங்கு தாஜ்மஹால் யார் கட்டியது என்று தீர்ப்பு கூறவா இன்று நீதிமன்றம் கூடியுள்ளது என வினவினர். மேலும், வரலாற்று விசயங்கள், தரவுகளுக்குள் போகவிரும்பவில்லை. ஆனல், பூட்டப்பட்டுள்ள ககதவுகளை திறக்க வேண்டும், உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்த வேண்டும் என்பதே உங்கள் கோரிக்கை என தெரிவித்த நீதிபதிகள், எந்த அடிப்படையில், எந்த உரிமையில் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகினார்? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர், குடிமகன் என்ற அடிப்படையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு விசயம் தொடர்பான தரவுகளையே அறிய முடியும், கேட்க முடியும். மாறாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி நடத்த வேண்டும் என அந்த சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர், அதனால் தான் தாஜ்மஹால் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என கோருவதாகவும், தவறான வரலாறு கற்பித்திருந்தால் அது திருத்தப்பட வேண்டும் என்பதாலும், இந்த வழக்கை தொடர்ந்ததாக தெரிவித்தனர்.

அப்போது பேசிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய எம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்து கொண்டு ஆய்வு செய்ய கோருங்கள் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள் என தெரிவித்த நீதிபதிகள் நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதுமன்றத்திடம் கோருவீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள் என காட்டமாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விவாதிக்க வாருங்கள் ஏற்கிறோம். ஆனால், நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளாதீர்கள் என தெரிவித்தனர். மேலும், எந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தீன் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோருகிறீர்கள் என்பதற்கு பதிலளியுங்கள் என கூறி வழக்கை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்த்னர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.