முக்கியச் செய்திகள் தமிழகம்

அலுவலகத்திற்கு ஆக.20 வரை வரவேண்டாம்- அதிமுக அறிவிப்பு பலகை

நீதிமன்ற உத்தரவு படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை
தொண்டர்கள் வரவேண்டாம் என தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு பலகை
வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கடந்த 11ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதில் இடைக்கால
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதோடு,
ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் கட்சிநின் அடிப்பை
உறுப்பினர் உட்பட அனைத்து பொருப்பில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் 200க்கும்
மேற்பட்டோருடன் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்பொழுது, இபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கல்வீச்சு, அடிதடி போன்ற கடுமையான தாக்குதல் நடைபெற்றது. இதனால் அங்கு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கட்சி அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கான தீர்ப்பு நேற்று முன்தினம் வந்தது, அதில், கட்சி அலுவலகத்தின் சீல் அகற்ற உத்தரவிட்டதோடு, காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நேற்று கட்சி அலுவலகம் வருவாய்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டது.

பின்னர், கட்சி அலுவலகத்திற்கு நீதிமன்ற உத்தரவு படி ஆகஸ்ட் 20ம் தேதி வரை தொண்டர்களும், ஆதரவாளர்களும் வரவேண்டாம் என தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதோடு, கட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அரக்கோணம் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்க” -திருமாவளவன்

Halley Karthik

லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை; உடலை குப்பை தொட்டியில் வீசிய கும்பல்

G SaravanaKumar

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

எல்.ரேணுகாதேவி