இந்தியாவில் அச்ச உணர்வுடன் முகநூலை பயன்படுத்துவதாக மெட்டா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பாலியல் ரீதியிலான அச்சங்களுடனே பெண்கள் முகநூலைப் பயன்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மொத்த பெண் பயனர்களில் 79 சதவிகிதத்தினர் பேஸ்புக் பயன்பாட்டின் போது ஆபாசம் மற்றும் பாலியல் தொல்லை குறித்து கவலைப்படுவதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெட்டா நிறுவனம், இந்தியாவில் பேஸ்புக்கின் வணிகம் குறித்த தனது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 2021 இறுதி வரை இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்வேறு பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மெட்டா ஆராய்ச்சியின் படி, பல பெண்கள் ஆண் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளத்தை பின்பற்றுவதை தவிர்த்துள்ளனர் என்றும், ஏனெனில் அவர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பற்றி கவலைப்படுவதாக தெரிவித்துள்ளது.
“பேஸ்புக்கில் தேவையற்ற தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள் பெண்களின் பயன்பாட்டிற்கு இடையூறாக உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.








