தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் திமுக வழக்குப்பதிவு செய்துள்ளது.
முரசொலி மூலப்பத்திரம் குறித்து அவதூறாக பேசியதை எல்.முருகன் திரும்பப் பெறவில்லையெனில் வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.அதற்கு, எல். முருகன் பதில் அளிக்காததை அடுத்து, அவருக்கு எதிராக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முரசொலி மூலப்பத்திரம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.







