திமுக மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி உட்பட 20 மாநகராட்சிகளுக்கு திமுக மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை  அறிவித்துள்ளது.             சென்னை மாநகராட்சி வேட்பாளர் : பிரியா ராஜன், துணை…

சென்னை மாநகராட்சி உட்பட 20 மாநகராட்சிகளுக்கு திமுக மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை  அறிவித்துள்ளது.

 

 

 

 

 

 

சென்னை மாநகராட்சி வேட்பாளர் : பிரியா ராஜன், துணை மேயர் வேட்பாளர் : மு. மககேஷ் குமார்

 

 


மதுரை மாநகராட்சி வேட்பாளர்:  இந்திராணி,

 

திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி வேட்பாளர் : பி.எம். சரவணன்

துணை மேயர் வேட்பாளர்: கே. ஆர். ராஜூ

 

5கோயம்புத்தூர் வேட்பாளர்; கல்பனா , துணை மேயர்: இரா, வெற்றிச்செல்வன்

 

6சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளர்: ஏ. இராமச்சந்திரன்

7திருப்பூர் மாநகராட்சி வேட்பாளர்: என்.  தினேஷ்குமார்

8ஈரோடு மாநகராட்சி வேட்பாளர்: நாகரத்தினம், துணை மேயர்: செல்வராஜ்

 

தூத்துக்குடி மாநகராட்சி வேட்பாளர்: என்.பி. ஜெகன், துணை மேயர்: ஜெனிட்டா செல்வராஜ்

ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளர்: ஜி. உதயகுமார்

தாம்பரம் மேயர் வேட்பாளர்: வசந்தகுமாரி கமல கண்ணன்

காஞ்சிபுரம்  மேயர் வேட்பாளர்:  மாகலட்சுமி யுவராஜ் , துணை மேயர்: ஜி. காமராஜ்

வேலூர் மேயர் வேட்பாளர் : சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் வேட்பாளர் : சுனில்

 

கடலூர் மாநகராட்சி வேட்பாளர் : சுந்தரி

ஓசூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர்:எஸ். ஏ. சத்யா

திண்டுக்கல்  மாநகராட்சி மேயர் வேட்பாளர்: இளமதி . துணை மேயர் : இராஜப்பா

 

 

 

நாகர்கோயில் மேயர் வேட்பாளர்: மகேஷ். துணை மேயர் வேட்பாளர்: மேரி பிரின்சி

 

சிவகாசி மேயர் வேட்பாளர்: சங்கிதா இன்பம் . துணை மேயர்: விக்னேஷ் பிரியா

தஞ்சாவூர் மேயர் வேட்பாளர் : இராமநாதன்

கரூர் மேயர் வேட்பாளர்: கவிதா கணேசன். துணை மேயர் வேட்பாளர்: தாரணி பி. சரவணன்.

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

இந்நிலையில் மார்ச் 4 நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர், துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக வெளியிட்டுள்ள மேயர் வேட்பாளர்களில் 11 பெண் வேட்பாளர்களும், 9 ஆண் வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். துணை மேயர் வேட்பாளர்களில் 10 ஆண் வேட்பாளர்களும், 5 பெண் வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் பட்டதாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரிகள் 11 பேரும், இளங்கலை பட்டதாரிகள் 20 பேரும் இடம்பெற்றுள்ளனர். படித்தவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பிலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.