கோவை: மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் மேயர்

கோவை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் மேயராக பதவி ஏற்க உள்ளார் கோவை மாநகராட்சியின் 19-ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனா கோவை மாநகராட்சியின் மேயர் பொறுப்பை ஏற்க உள்ளார்.…

கோவை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் மேயராக பதவி ஏற்க உள்ளார் கோவை மாநகராட்சியின் 19-ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனா கோவை மாநகராட்சியின் மேயர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்று மேயர் பதவியை தக்கவைத்தது. இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சி ஆக கருதப்படும் கோவை மாநகராட்சியின் மேயர் பொறுப்பை ஏற்க இருப்பவர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும் திமுக தொண்டர்கள் இடையேயும் மேலோங்கி இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி வரலாற்றில் முதல்மறையாக மேயர் பொறுப்பு என்பது பெண்களுக்காக வழங்கப்பட்டிருந்தது. இதனால், மேயர் பதவிக்கு கடுமையான போட்டியும் இருந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சியில் 19-வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனாவிற்கு மேயர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனா கடந்த 10 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக உள்ளார். மேலும், கல்பனாவின் கணவர் ஆனந்குமார் பகுதி பொறுப்புக் குழு நிர்வாகி உள்ளார். மூன்று தலைமுறை திமுக குடும்பம் என்பதாலும் கட்சி பணிகளில் தொடர்ந்து பங்கேற்றதால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்பனாவின் குடும்பம் கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் உள்ளனர். கவுன்சிலராக வெற்றி பெற்ற பின்னர் கல்பனா கோவையில் இருந்து பேருந்தில் பயணம் செய்து தமிழக முதல்வரை சந்தித்து வந்துள்ளார். இவர் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

மேயர் பதவி வழங்கப்பட்டது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த கல்பனா, கோவை மாநகராட்சியைக் சிறந்த மாநகராட்சியாக மாற்றி காட்டுவேன் எனவும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இருப்பதாகவும் இந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கு மிக்க நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதலோடு மக்கள் பணியாற்று போவதாக அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.