பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு ஆகிய மூன்று வழக்குகளில் கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும், அதிமுகவை அழிக்க நினைப்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு நாடகம்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
மேலும், அதிமுகவிற்கு ஒற்றை தலைமை இல்லாததால்தான் பொய் வழக்குகள் போடப்படுவதாக கூறுவது தவறான கருத்து எனக்கூறிய அவர், அதிமுகவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக வழிநடத்துகிறார்கள் என கூறினார்.
மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய ஜெயக்குமார், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால்தான் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








