மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு ஜன.21-ல் நடைபெறும் என அறிவிப்பு!

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஜன.21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  2007-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில் முத்திரைப் பதித்து,  திருப்புமுனை ஏற்படுத்திய…

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஜன.21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2007-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில் முத்திரைப் பதித்து,  திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து,  கடந்த டிசம்பர் 17, 2023 அன்று திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவிருந்தது.

இதையும் படியுங்கள்: சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!

ஆனால் இந்த மாநாடு “மிக்ஜாம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஜன.21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.