திமுக இளைஞரணி 2வது மாநாடு – Drone Show முதல் Artificial Intelligence வரை சிறப்பம்சங்கள் என்னென்ன..?

திமுக இளைஞரணி 2வது மாநாட்டு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின்…

திமுக இளைஞரணி 2வது மாநாட்டு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என தடபுடலான உணவுகள் தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் சிறப்பம்சங்கள் :

  • நூறு அடி உயரத்திற்கு கொடியேற்றப்பட்டுள்ளது
  • பெரியார்,அண்ணா, கலைஞர் மற்றும் க.அன்பழகன் ஆகியோரின் வெண்கலச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது
  • ட்ரோன் Show மூலம் கண்கவர் காட்சிகள்
  • திமுக இளைஞரணி மாநாட்டிற்கு  வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்ட கலைஞரின் AI வீடியோ
  • மாநாட்டிற்கு வருகை தந்த இளைஞரணியினருக்கு மஞ்சப்பையுடன் தின்பண்டங்கள்
  • BAN NEET எனும் மிகப் பெரிய பதாகை மற்றும் 50லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்ட கடிதங்களின் தொகுப்புகள்
  • திமுக இளைஞரணி மாநாட்டின் செல்ஃபி மேடை
  • 50,000 கிலோ மட்டன், 20,000 கிலோ சிக்கன் கொண்டு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது
  • இளைஞரணி மாநாட்டினை வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷன் 

https://www.instagram.com/reel/C2VH9S3yneW/?igsh=ZzJuZGtlamtyOW5v

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.