திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு விலையில்லா கால்நடைகள் வழங்கப்பட்டதாகக் கூறினார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மீது உண்மையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே திமுக அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆழ்வார் திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சாத்தான்குளம் பகுதியில் உயர்மட்ட பாலமும், பெரிய தாழையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவும் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து, திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கில் பேசிய முதல்வர், உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிய கட்சி அதிமுக மட்டுமே என பெருமிதம் தெரிவித்தார். உழைக்கும் மகளிருக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் 8ஆயிரத்து 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.