அமேசான் தனது உற்பத்தி பிரிவினை இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
போக்ஸ்கான் நிறுவனத்தின் கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியின் மூலம், பயர் டிவி ஸ்டிக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ள அமேசான் அதற்காக சென்னையை தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் முதலீடு குறித்தும், இதன் மூலம் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் குறித்தும் எவ்வித தகவல்களையும் அமேசான் வெளியிடவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“தமிழகம் எப்போதும் அமேசான் இந்தியா நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது. இதன் பின்னணியில் சென்னையில் உற்பத்தியை தொடங்குவதை பெருமையாக கருதுகிறோம், இந்த புதிய தொழிற்சாலை மூலம் உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்”. என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் தொடங்குவதற்கு போட்டியாக உத்தரப் பிரதேசமும், கர்நாடகாவும் இருந்தது என்றும், துறைமுக வசதி, வேலையாட்கள் பலம், புதிய எலெக்ட்ரானிக் கொள்கை, புதிய முதலீடுகள் போன்றவற்றின் அடிப்படையில் தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆப்பிள் மற்றும் MoU&TATA ஆகியவை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முறையே 1,100 மற்றும் 5,763 கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.