அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த இரு வேறு கருத்துகள் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் பயனுள்ளதாகவே இருந்து வருகின்றன என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.
அந்த வகையில், பிரனவ் லால் எனும் இளைஞர் சிறப்பு கேமிரா மூலம் தனது புகைப்படக் கலையை வெளிப்படுத்தி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

vOICe எனும் சிறப்பு புகைப்படக் கருவி, ஒலியின் அலையை சரியான முறையில் கணித்து அதன் மூலம் புகைப்படத்தினை எடுக்க வழிவகை செய்கின்றது. இதன் மூலம் பிரனவ் புகைப்பட உலகில் தனது பயணத்தினை தொடங்கியுள்ளார்.
இது குறித்து பிரனவ் குறிப்பிடுகையில், தான் மெதுவாக இந்த புகைப்படக் கருவி மூலம் புகைப்படங்களை எடுக்க பழகிக் கொண்டதாகவும், தான் இதுவரை கண்டதை இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்ள நினைப்பதாகவும், அதற்கு இந்த கேமரா உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் இயற்கை காட்சிகள் மற்றும், கட்டிடக் கலைகளை முதன்மையாக படமெடுத்து வருகிறார். “இது புகைப்படக் கலையையும் கடந்து, ஒரு சூழலை புரிந்துகொள்வதற்கான பயணத்தின் ஒரு பாதையாக இதை நான் கருதுகிறேன். இந்த பயணத்தில் நான் ஒரு உண்மையான பயணியாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.